சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய ரயில் போக்குவரத்து வசதியை திருச்சி கொண்டுள்ளது. திருச்சியில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரம்மாண்டமான இடவசதி கொண்ட முன்புற நுழைவு வாயிலையும் கொண்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலுக்கு ” கர்தவ்ய த்வார்” என்று ஹிந்தி பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு ” கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரெயில்வே. ” கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் ” கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை ” இந்தித் திணிப்பு” மட்டுமே. தெற்கு ரெயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Comments are closed.