ஊர்க்காவல் படையில் பணியாற்றும் 330 பேருக்கு ‘ஹெல்மெட்’…* திருச்சி எஸ்.பி.செல்வ நாகரத்தினம் வழங்கினார்..!
சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டும், சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரியும் 330 நபர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், ஹெல்மெட் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊர்க்காவல் படையினர் ஹெல்மெட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர். ஆயுதப்படை மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி ஜமால் முகமது கல்லூரி, சுப்ரமணியபுரம் வழியாக சென்று மீண்டும் ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு பெற்றது. இதில், மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர், திருச்சி சரக உதவி தளபதி ராஜன், வட்டார தளபதி சையூப் மற்றும் துணை வட்டார தளபதி பிரவீனா தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.