தமிழ்நாட்டில் வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.,எனவே மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கும். இருந்தபோதிலும் அதன்படி,தமிழகத்தில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது.கூடுதலாக தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதனையொட்டி மழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மாவட்ட அளவில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.