சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல திருச்சியில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. அதனை தொடர்ந்து படிப்படியாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதிக்கு பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையின் காரணமாக ஜவுளிக்கடைகளின் முன்புறம், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் போன்ற கடைகளில் தஞ்சமடைந்தனர். மழை விட்டதும் அங்கிருந்து சென்றனர். பலத்த மழையின் காரணமாக திருச்சியில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வகையில் மலைக்கோட்டை பகுதியிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது மலைக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ள மாநகராட்சி குடிநீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டதால் தொட்டியில் உள்ள குடிநீர் அருகில் உள்ள சாக்கடையில் சென்றன. சாக்கடையில் அடைப்பு இருந்ததால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் மலைக்கோட்டை கோவில் அலுவலகம் அருகே உள்ள டிக்கெட் கவுண்டர், யானை நிற்கும் இடம், சுவாமிகளை வீதி உலா கொண்டு செல்லும் வாகனங்கள் வைத்துள்ள இடம் போன்ற இடங்களில் சாக்கடை நீர் புகுந்தது.
இதனால், உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.இதனால் பக்தர்கள் அவதிக்கு உள்ளானார்கள். பின்னர், சாக்கடை நீரை வெளியேற்றும் பணி துரிதமாக நடந்தது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 949
Comments are closed.