தமிழ்நாட்டில் சுட்டெரித்த வெயிலுக்கு விடை கொடுத்து கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்தவகையில் நேற்று மாலை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை 5 மணியிலிருந்து சுமார் 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ,திருச்சி மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் வெள்ளக்காடாக மாறின. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. குறிப்பாக ஏர்போர்ட் அருகே உள்ள பாரதிநகர் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் நேற்று இரவில் இருந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், இப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் இல்லை. மழை நின்றவுடன் மின்வினியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் 65 வது வார்டு கவுன்சிலர் உள்ளிட்டோர் அந்தப் பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.