Rock Fort Times
Online News

கனமழை எதிரொலி: பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின்  காரணமாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று ( 14.11.2023) நடைபெறயிருந்த பட்டய தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கு இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்