Rock Fort Times
Online News

உங்களது செல்போனில் நீண்டகாலமாக ரீசார்ஜ் செய்யவில்லையா?- வந்தது புது சிக்கல்…!

இன்றைய நவீன காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை காண்பது அரிதான ஒன்றாகி விட்டது. சிலர் இரண்டுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் சிலர் விலை உயர்வின் காரணமாக ஒன்றுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்கிறார்கள். மற்றொரு சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். அதற்கு தற்போது சிக்கல் வந்துவிட்டது. நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் மற்றும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொபைல் எண்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஐ எனப்படும் பணப்பரிவர்த்தனை இயங்காது என தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது. கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ (UPI) செயலி மூலம் பணம் செலுத்தும் முறை பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. அதன்படி, இணையவழி மோசடிகளை தடுப்பதற்காக புதிய நடைமுறையை அமல்படுத்துவதாக தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் கூறியுள்ளது. அதன்படி ரீசார்ஜ் செய்யாததால் அழைப்பு அல்லது குறுந்தகவல் ஆகிய எந்த சேவையும் இல்லாத எண்ணுடன் யுபிஐ பயன்படுத்துவோர் செல்போன் எண்ணை மாற்றிவிட்டு தங்கள் வங்கி கணக்கின் தகவலை மாற்றாதவர்கள் வங்கி கணக்கில் எண்ணை நீக்காமல் தங்கள் செல்போன் எண்ணை சரண்டர் செய்தவர்கள் மற்றும் யுபிஐயில் உள்ள மொபைல் எண் வேறு யாருக்கேனும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தாலும் யுபிஐ இயங்காது.
எனவே வாடிக்கையாளர்கள் உடனடியாக வங்கியை அணுகி செயல்பாட்டில் உள்ள செல்போன் எண்ணை தங்கள் வங்கி கணக்குடன் இணைத்தால் தடையில்லாமல் சேவையை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்