திருச்சி வந்த ரெயிலில் பாக்கெட், பாக்கெட்டாக குட்கா பறிமுதல்… * கடத்தி வந்தது யார்? போலீசார் விசாரணை!
திருச்சி இருப்புப் பாதை எஸ்.பி. ராஜன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.சக்கரவர்த்தி மேற்பார்வையில் திருச்சி இருப்புப் பாதை இன்ஸ்பெக்டர் ஷீலா, பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் காவலர்கள் இன்று ( மே 4) அதிகாலை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நடைமேடை 8-ல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேலி நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது பொது பெட்டியில் சாக்கு பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதற்கு யாரும் சொந்தம் கொண்டாடாததால் அந்த சாக்குப்பையை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட குட்கா இருந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அதனை ரயிலில் கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.