ரகசிய புகார் வந்ததின் பேரில் இன்று( 02..05.2023 ) உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், துறையூர் நகராட்சி பகுதி தெப்பக்குளம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்ட குழுவால் திடீர் ஆய்வு செய்தார். அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை பொருட்கள் 40 பாக்கெட்கள் கண்டயறிப்பட்டது. அங்கிருந்த காவலாளியை விசாரித்த போது மற்றொரு குடோன் இருப்பதும் தெரிய வந்தது . அந்த குடோனை அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாகி அலுவலர்(VAO) முன்னிலையில் திறக்கப்பட்டு அங்கிருந்த சுமார் 805 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இக்குற்றத்தில் ஈடுபட்ட பாலாஜி, மற்றும் உத்தம்சிங்கிடம் பணிபுரியும் ஆசாசு ஆகியோரையும் ,பறிமுதல் செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்களையும் துறையூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தார். மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு கூறுகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுபோன்று தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கியோ அல்லது விற்பனைக்கோ வைக்கப்பட்டிருந்தால் அவர்களின் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தகவல் அளிப்பவரின் விபரங்கள் இரகசியம் காக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.