திருச்சியில் காவலர் வீரவணக்க தினம் அனுசரிப்பு…
நினைவுத்தூணில் போலீஸ் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி..

1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலா்கள் உயிரிழந்தனர். மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், நாகலாந்து, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த RFF, BSF என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 188 வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
இதேபோல பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்தியா முழுவதும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் காவலர் வீர வணக்கதினம் கடைபிடிக்கப்பட்டது. திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் நிகழ்வில் மத்திய மண்டல ஐ.ஜி. க. கார்த்திகேயன் ஐபிஎஸ், டி.ஐ.ஜி. பி. பகலவன் ஐபிஎஸ் , எஸ்.பி. வீ. வருண்குமார் ஐபிஎஸ் , மாநகர காவல்துறை ஆணையர் என்.காமினி ஐபிஎஸ் , மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் செல்வகுமார் அன்பு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்று காவலர்களின் நினைவுத்தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 22 பேர் மூன்று முறை வானில் துப்பாக்கியால் சுட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.