வணிக நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படவில்லை- மத்திய பட்ஜெட் குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு கருத்து…!
நாடாளுமன்றத்தில் நேற்று(01-02-2025) பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இனி வரி செலுத்த தேவையில்லை என்பது உள்பட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய பட்ஜெட் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக் கையினை ஏற்று வருமான வரி உச்ச வரம்பை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தி அதற்கு வருமான வரி இல்லை என்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. வருமான வரி தாக்கலுக்கான காலத்தை 4 ஆண்டுக ளாக உயர்த்தி அறிவித்துள்ளனர். சிறு, குறு தொழில்துறையினர் ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வகையில் புதிய கிரெடிட் கார்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வர வேற்புக்குரியது. வருமான வரி சட்டம் எளிதாக்கப்படும் எனபதும் சிறப்பு. கல்வி, சுகாதாரம், ஏஐ தொழில்நுட்பம் போன்வற்றிற்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பாராட்டுக்குரியது. வாடகை கட்டிடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு வாடகையுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டியை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழகம் சார்ந்த திட்டங்களுக்கான நிதிகள், மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெரியளவில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. அதிக இனிப்பும், குறைந்தளவு கசப்பும் நிறைந்த பட்ஜெட் இது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள
Comments are closed.