குரூப்-4 தேர்வுக்கு கூடுதலாக 727 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 4 பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்தநிலையில் தற்போது கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4662 ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.