Rock Fort Times
Online News

குரூப் 2 முடிவுகள் டிசம்பரில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசுத் துறைகளில் குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 5 லட்சத்து 81,305 பட்டதாரிகள் எழுதினர். அதைத் தொடர்ந்து குரூப் 2 தேர்வுக்கான விடைக் குறிப்பு (கீ ஆன்சர்) செப்டம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் மீதான ஆட்சேபனைகளை தெரிவிக்க செப்.30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, 2ஏ பதவிக்கான முதன்மைத் தேர்வு (மெயின்) நடைபெறும். இதேபோல், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாகும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்