தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் பச்சைமலையில் பசுமை நடை பயணம் நடைபெற்றது. இதில் 45 மாணவிகள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையான பச்சைமலை, இயற்கை சூழலியல் நிறைந்தது. அரியவகை தாவரங்கள், மர வகைகள், அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள், மூலிகைகள், பலா, அன்னாசி மற்றும் தானியங்கள் நிறைந்தது. அனைத்து காலங்களிலும் பசுமையான மலைவளம், தூய்மையான காற்று என சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க பச்சைமலையில் செண்பகம் காளியம்மன் கோயில் திட்டுப்பகுதியில் இருந்து கல்லூரி மாணவிகள் 4 கிலோமீட்டர் பசுமை நடைப் பயணம் மேற்கொண்டனர். இதற்கு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் தலைமையேற்று அழைத்துச் சென்றார். மேலாண்மைத்துறை உதவிப் பேராசிரியர் வித்யா, மாணவர் மன்ற பொறுப்பாளர் யுவராணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.