Rock Fort Times
Online News

ராஜ் பவனை அரசியல் பவனாக மாற்றுகிறார் ஆளுநர் ரவி! சட்டசபையில் மு.க ஸ்டாலின் பேச்சு!    

தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்; அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும். நாள்தோறும் கூட்டங்கள் நடத்தி ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார். வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம். ஆளுநர் பேசி வந்த கருத்துக்களுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை. ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உண்டு. மக்கள் நலனுக்காக கொண்டு வரும் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் பேரவை வருந்துகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்க வேண்டும்.மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு மத்திய அரசு கால நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்