தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேட்டூர் நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்ய கூடிய நிலப்பரப்பில் சம்பா சாகுபடி பொய்த்த நிலையில் அவற்றை வறட்சி பகுதிகளாக அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீட்டை பொறுத்த வரையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நீதி ஒதிக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி குறித்து சரியாக வியூகம் அமைக்கும். திருச்சியில் ரௌடியை சுட்டு கொன்ற சம்பவம் தவறு என்று சொல்லவில்லை. சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு நிறைவேற்றியுள்ள பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். மக்களுக்கு தேவையான மசோதாக்களை ஒரு காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும். அரசு பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து தனது கால்களை இழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. எனவே அனைத்து அரசு பேருந்துகளிலும் கதவுகள் அமைக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே வாசன் கூறினார். இந்த பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் குணா, இன்டர்நெட் ரவி,கேவிஜி ரவிந்திரன், நிர்வாகிகள் கே.டி. தனபால், ராஜு, புங்கனூர் செல்வம், எடத்தெரு ஜெயக்குமார் உள்ளிட்ட பலா் உடனிருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.