சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் தொலைதூரப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. தொலைதூர பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்கெனவே அரசின் சார்பில் பிரத்தியேக இணையதளம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனாலும் இது குறித்து கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை. எனவே அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் முன்பதிவு வசதியை அதிகப்படுத்தும் நோக்கிலும், அரசு இ – சேவை மையங்களில் டிக்கெட் எடுப்பதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது.

Comments are closed.