Rock Fort Times
Online News

மாணவர்களுக்கு இனிப்பான செய்தி: தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நாட்கள் நீட்டிப்பு…!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 2ம் தேதியுடன் நிறைவு பெற்று 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்