அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ம் தேதி தேதி( வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாகும். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள், படிப்புக்காக தங்கி உள்ள மாணவ- மாணவிகள் சொந்த ஊர் சென்று விட்டு ஒரு நாளில் திரும்புவது சிரமம் என்பதால் தீபாவளிக்கு மறுநாளும் 01-11-2024 (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை நாளாக தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு 1.11.2024 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.