Rock Fort Times
Online News

ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை: இன்றைய நிலவரம்…!

சர்வதேச அளவிலான வணிக சூழலை பொறுத்து இந்தியாவில் தங்கம் விலை தினசரி மாற்றியமைக்கப் படுகிறது. தங்கம் விலையை பொருத்தவரை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து அதிகபட்சமாக ரூ.75,760 ஆக உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கம் விலை இறங்கு முகத்தில் காணப்பட்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாரத்தின் முதல் நாளான நேற்றும் (18-08-2025) தங்கம் விலை மாறவில்லை. இதன்படி நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.9,275-க்கும், ஒரு சவரன் ரூ. 74,200-க்கும் விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலை இன்று (ஆகஸ்ட் 19) மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9.235க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.126க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்