இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அவ்வப்போது விலை குறைந்து சற்று நிம்மதி அளித்தாலும் பெரும்பாலான நாட்களில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்றும்(21-04-2025) தங்கத்தின் விலை உயர்ந்தது. அந்த வகையில் சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. ஏப். 13-ல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.70 ஆயிரத்தை கடந்த நிலையில் பின்னர் சற்று குறைந்தது. பின்னர் ஏப். 16-ல் மீண்டும் ரூ.70 ஆயிரத்தை கடந்தது. இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 உயர்ந்து ரூ.9,015-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.111-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. ஒரு லட்சத்து 11 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்த வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Comments are closed.