மீண்டும் வேகமெடுக்கும் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை நெருங்குகிறது…– நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கம் விலை சற்று குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதன் பின் விலை சரிந்தது, மீண்டும் ஆகஸ்ட் 6-ந் தேதி ரூ.75 ஆயிரத்தை கடந்து, அதிலும் 8-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,760 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. பின்னர், ஒரு சவரன் ரூ.72 ஆயிரம் வரை வந்தது.கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில், சமீபத்தில் கிராமுக்கு ரூ.35, சவரனுக்கு ரூ.280 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,390-க்கும், ஒரு சவரன் ரூ.75,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக ரூ.75 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15, சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,405-க்கும், ஒரு சவரன் ரூ.75,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.130-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65, சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,470-க்கும், ஒரு சவரன் ரூ.75,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போக்கில் விலை உயர்ந்தால், இன்னும் சில நாட்களில் ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.