இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் தான் பிரதான சேமிப்பாக இருந்து வருகிறது. மக்கள், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். திருமணம் மற்றும் முக்கிய வைபவங்களுக்கு தங்கம் தான் பிரதானமாக உள்ளது. ஆனால், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டதால் ஏறிய வேகத்தில் இறங்கு முகத்தை கண்டது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று(10-08-2024) காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,445-க்கும், ஒரு பவுன் ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.89-க்கு விற்பனையாகிறது.
Comments are closed.