இந்த வருட தொடக்கம் முதல் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிரடியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ. 66,880 விற்பனையான நிலையில், நேற்று முன்தினம் ரூ.68,080க்கும்,நேற்று ரூ. 68,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல்-4) காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 1,280 அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 67,200-க்கும் ஒரு கிராம் ரூ. 8,400-க்கும் விற்கப்படுகிறது. இதனிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 4 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ 108-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments are closed.