Rock Fort Times
Online News

திருச்சி பேருந்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு….

திருச்சி மாவட்டம் சமயபுரம் காருண்யா நகரை சேர்ந்தவர் சமதர்மதாஸ். இவரது மனைவி ஜெயா (வயது 59). இவர் திருச்சி சமயபுரம் நால்ரோடு பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து டவுன் பஸ்ஸில் மாம்பழச்சாலைக்கு வந்தார். மாம்பழச்சாலையில் இறங்கும் போது இவரது கழுத்தில் இருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து ஜெயா திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்