திருச்சி, கே.கே.நகரில் போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் சிக்கியது…- பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்..!
திருச்சி, கே.கே.நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கே.கே.நகர் கலிங்க நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி பாலக்கரை காஜா பேட்டையை சேர்ந்த நாகராஜ், கிராப்பட்டியை சேர்ந்த பாலாஜி, கே.சாத்தனூரை சேர்ந்த விஷால், கே.கே.நகர் ஐயப்பன் நகரை சேர்ந்த கிருத்திக்குமார், கிராப்பட்டியை சேர்ந்த ஆகாஷ் பால்ராஜ், மணிகண்டத்தைச் சேர்ந்த பிரேம்குமார், ஐயப்பன் நகரை சேர்ந்த ஸ்டீபன் என்பது தெரியவந்தது. அவர்களை சோதனை இட்டபோது போதை ஊசிகள், கட்டு கட்டாக பணம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.