திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள வனப்பகுதியில் பாறைகளை உடைத்து டிராக்டர் டிப்பரில் கடத்திச் செல்லப்படுவதாக அந்தப்பகுதி மக்கள் சிறுகனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆனால், இது தொடர்பாக சிறுகனூர் போலீஸ் பெண் காவல் ஆய்வாளர் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் கடந்த 6 நாட்களாக பாறை கற்களை ஏற்றி நின்ற டிராக்டரை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், பாறை கற்களை டிராக்டரில் கடத்திய டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சிறுகனூர் பகுதியில் பாறைகளை உடைத்து டிராக்டரில் கடத்தி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கு, போலீசாரும் துணை புரிகின்றனர். இதுகுறித்து திருச்சி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் வருண்குமார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.