நாடு முழுவதும் நாளை ( செப்டம்பர் -07 ) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட்டில் வழக்கம்போல பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்றைய தினம் கனகாம்பரம் கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கும் முல்லை பூ 500 ரூபாய்க்கும், அரளிப்பூ 200 ரூபாய்க்கும், ரோஜா பூ கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக விநாயகர்சதுர்த்திக்கு முதல் நாள் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்கள் வாங்க திருச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள அரியலூர் புதுக்கோட்டை பெரம்பலூர் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதுவார்கள். ஆனால், இன்றைய தினம் குறைந்த அளவிலேயே வியாபாரிகளும் பொதுமக்களும் பூக்களை வாங்கி சென்றனர். இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் பூ வியாபாரிகள் கூறும்போது., நேற்றை விட இன்று பூக்களின் குறைவாகத்தான் உள்ளது. விநாயக சதுர்த்திக்கு முதல் நாள் ஆயிரக்கணக்கானர் வந்து பூக்களை வாங்கி செல்வார்கள். ஆனால் இன்று விற்பனை மந்தமாகவே உள்ளது. பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் வருகை குறைவாகவே இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments are closed.