கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் சீசனையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வண்டி எண்:- 07111 ஹசூர் சாஹிப் நந்தேத்-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி, 27-ந் தேதி மற்றும் டிசம்பர் 4-ந் தேதி, 11-ந் தேதி, 18-ந் தேதி,25-ந் தேதி மற்றும் ஜனவரி மாதம் 1-ந் தேதி, 8-ந் தேதி, 15-ந் தேதி ஆகிய (வியாழக்கிழமை) நாட்களில் ஹசூர் சாஹிப் நந்தேத் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். இதே ரெயில் மறுமார்க்கத்தில் வண்டி எண்:- 07112 கொல்லம்-ஹசூர் சாஹிப் நந்தேத் சிறப்பு ரெயில் வருகிற 22-ந் தேதி, 29-ந் தேதி, டிசம்பர் 6, 13, 20, 27-ந் தேதிகள் மற்றும் ஜனவரி 3, 10, 17-ந் தேதிகளில் கொல்லத்தில் இருந்து சனிக்கிழமைகளில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஹசூர் சாஹிப் நந்தேத் ரெயில் நிலையத்தை சென்றடையும். மேற்கண்ட தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.