இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் யு.பி.ஐ பயன்பாட்டிற்கு சில புதிய விதிமுறைகள் இன்று ( ஆக.1 ) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஒரு யுபிஐ ஆப் மூலம் வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகையை ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பார்க்க முடியும். நிலுவையில் உள்ள பரிவர்த்தனையின் நிலவரத்தை 3 முறை மட்டுமே பார்க்க முடியும். ” ஆட்டோ பே ” பரிவர்த்தனைகள் காலை 10 மணிக்கு முன்பாக, பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 9:30 மணிக்கு மேல் என மூன்று நேர வரம்புகளில் மட்டுமே செயல்படுத்தப்படும். யுபிஐ ஆப்புகளில் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்களின் விபரங்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும். ஒரு யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு முன், பணம் பெறுபவரின் பதிவு செய்யப்பட்ட பெயர் காண்பிக்கப்படும்.
Comments are closed.