Rock Fort Times
Online News

கோடை விடுமுறையை பயனுள்ளதாக்க பள்ளி மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி முகாம்…- பங்கேற்று பயனுடைய திருச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு !

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால விடுமுறை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடத்தப்படும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று மாணவர்கள் பயனடைய வேண்டும் என, திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது., ” திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட அளவில் கோடைக்கால பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வரும் ஏப்.25 முதல் மே.15 வரை 21 நாட்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் காலை 6.30 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சிகள் நடைபெறும். இதில் தடகளம், கால்பந்து, வளைகோல் பந்து, கையுந்து பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு கட்டணமில்லா பயிற்சி முகாம் நடத்தப்படும். இப்பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தினமும் ஊட்டச்சத்துமிக்க உணவு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவாியில் நேரிலோ அல்லது 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்