தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி வெளியிட்டுள்ளது. சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய – மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும். இந்த அகாடமியில் படித்தவர்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அரசின் பல்வேறு முக்கிய பணிகளில் பதவி வகித்து வருகின்றனர். மாதிரி வினாத்தாள்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்தின்படி, அனைத்துப் பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் வழியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதும் அனைவரும் முன்பதிவு செய்து, இந்த மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ்அப் வழியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற முன்பதிவுக்கு ‘PG -TRB MODEL QUESTION PAPER-2025’ என்று டைப் செய்து தங்களது ‘SUBJECT’ மற்றும் முகவரியுடன் 9176055568 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 9176055576, 9176055578 என்கிற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு https://www.aatchithamizhiasacademy.com/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.