Rock Fort Times
Online News

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இலவச மருத்துவ முகாம்…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி குற்றவியல்  வழக்கறிஞர் சங்கம், வாசன் கண் மருத்துவமனை,  துளசி பார்மசி மற்றும் சூர்யா டென்டல் கேர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்  நடந்தது.  முகாமை  மாவட்ட நீதிபதி அ.மணிமொழி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக  தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ். மீனா சந்திரா, சார்பு நீதிபதி சி.சிவக்குமார், மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் நீதிபதிகள் எம்.பாலாஜி, பி.சுபாஷினி, கே.ஆர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில், மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்லாஸ், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், துணைத் தலைவர் சசிகுமார், இணைச்செயலாளர் விஜய் நாகராஜன் மற்றும் டாக்டர்கள் பி.செந்தில்குமார், ரூபியா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் செய்திருந்தார். தமிழக வழக்கறிஞர் சங்கத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவ முகாம் இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் இலவச ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இம்முகாம் மூலம் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பயன் பெற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்