Rock Fort Times
Online News

திருச்சியில் 240 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா- * இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வழங்கினார்…!

அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆட்சேபனை அற்ற பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி மாநகராட்சி 61-வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி, வடக்கு தெரு, டி.எஸ்.எம்.அவென்யூ ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் 240 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நேற்று (ஜூன் 17) நடைபெற்றது. விழாவில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா மற்றும் பகுதி செயலாளர் மணிவேல், மாமன்ற உறுப்பினர் ஜாஃபர் அலி, வட்டச் செயலாளர் சாமுவேல் ராஜா, கிழக்கு வட்டாட்சியர் சக்திவேல் முருகன் மற்றும் பொதுமக்கள் , கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்