திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் இர்ஃபான். இவரது தாயாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் நேபாள நாட்டிலிருந்து பேசுகிறேன். உங்களது செல்போன் நம்பருக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை விழுந்துள்ளது. அந்த பரிசுத் தொகையினை பெறுவதற்கு சிறிது தொகை ஜி.எஸ்.டி.யாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண் பல்வேறு தவணைகளாக அந்த மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்கு எண்ணுக்கு ரூ.9 லட்சத்து 900 பணத்தை அனுப்பி உள்ளார். பின்னர் ஓரிரு தினங்களில் பரிசுத்தொகை உங்களது வங்கி கணக்குக்கு வந்து சேரும் என அந்த மர்ம நபர் கூறியுள்ளார். ஆனால், பல நாட்கள் காத்திருந்த போதும் பரிசு தொகை வரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண் தனது மகனிடம் கூறியுள்ளார். இது குறித்து, ஷேக் இர்ஃபான் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.