Rock Fort Times
Online News

திருச்சி முன்னாள் எம்பி எல்.கணேசன் காலமானார்… முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூர் பகுதியை சேர்ந்த தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.,யுமான எல்.கணேசன் (91) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், திமுக. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன் மறைந்த செய்தி அறிந்து துயரம் அடைந்தேன். மொழிப்போர் களத்தில் ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிராக புறப்பட்ட தளகர்த்தர்களில் ஒருவர் கணேசன். சட்டசபை, பார்லிமென்ட் என முழங்கிய கணேசனை இனி காண முடியாது என்பதை எண்ணும்போதே வேதனை அளிக்கிறது. மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கணேசன் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எல்.கணேசன் திருச்சி முன்னாள் எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்