Rock Fort Times
Online News

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்…!

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இன்று( ஜன.25) இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன். அதிமுகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி கு.ப.கிருஷ்ணன். இவர் ஸ்ரீரங்கம் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991-1996 காலகட்டங்களில் விவசாயத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தேமுதிகவை விஜயகாந்த் ஆரம்பித்ததும் அக்கட்சியில் சிறிது காலம் பயணித்தார். பின்னர் அதிமுகவில் இணைந்த அவர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்நிலையில் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.  ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்