திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி, அதிமுகவுக்கும், தமிழக மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் நாளை (5.12.2023) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்படும். அதேபோல கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தொிவித்துள்ளாா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.