Rock Fort Times
Online News

மண்ணச்சநல்லூர் அருகே வெளிநாட்டு வேலை – ஏஜென்டிடம் கொடுத்த பணம் ஏய்ப்பு- மனஉளைச்சலில் பூச்சி மருந்து சாப்பிட்டவர் மரணம்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், பூனாம்பாலையம், எருதுகாரபண்ணையைச் சேர்ந்தவர் வசந்த் (28). இவர் வெளிநாட்டு வேலைக்காக தன் உறவினர் 15 பேரிடம் ரூ.19 லட்சம் வரை கடன் வாங்கி அதை ஏஜெண்டான முத்துசெல்வம் என்பவரிடம் கொடுத்தார். இந்நிலையில் முத்து செல்வம் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் வசந்தை ஏமாற்றியுள்ளார். இதில் மனஉளைச்சலில் இருந்து வந்த வசந்த் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேற்சிகிச்சைக்காக அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அங்கு வசந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்