Rock Fort Times
Online News

வெளிநாட்டு வேலை – கை நிறைய வருமானம் !மோசடி வலை விரித்து இளைஞர்களை ஏமாற்றிய போலி ஏஜென்ட் கைது!

படித்த இளைஞர்களை குறி வைத்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சமூக வலைதங்களில் சில போலியான நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக அவ்வப்போது காவல்துறை எச்சரித்து வருகிறது.ஆனாலும் எதையெதையோ செய்து வித்தியாச வித்தியாசமாக கவர்ச்சிகரமான விளம்பரத்தை அள்ளி இறைத்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் தங்கள் சித்து விளையாட்டுகளை காட்டிக்கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைக்கு செல்ல முயற்சி செய்யும் படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை குறி வைத்து சில நபர்கள், பல்வேறு துறைகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை பரப்பி வருவதாக, சமீப நாட்களாக குற்றசாட்டுகள் இருந்து வருகின்றன. இதனை தடுக்க தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு முறைகளில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில், கடந்த 13ஆம் தேதி நாஞ்சிக்கோட்டையை சேர்ந்த நாகராஜன், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டையை சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் நாச்சியார் கோவிலை சேர்ந்த மகேஸ்வரன், சூரக்கோட்டையை சேர்ந்த கௌதம் ஆகியோர் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து, ஒவ்வொரு நபரிடமும் ரூபாய் 40 ஆயிரம் பணத்தைப் பெற்று தங்களை வெளிநாடு அனுப்பாமல் ஏமாற்றியதாக புகார் கொடுத்திருக்கின்றனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்து இளைஞர்களை ஏமாற்றிய போலி ஏஜென்ட் குறித்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் (38) என்பவரை காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் உள்ளிட்ட போலீசார் அடங்கிய குழுவினரால் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்