திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் சிக்கியது, ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள்…!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொள்வது வழக்கம். அந்தவகையில் நேற்றைய தினம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு ஒரு பயணி கடத்தி வந்த ரூ.7 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பிடிபட்டன. இந்நிலையில் இன்று (29- 01-2025) அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 56,400 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் இந்திய மதிப்பு ரூ.8 லட்சத்து 46 ஆயிரம் ஆகும். அந்தப் பயணியிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.