திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தில் இண்டிகோ விமான சேவைக்கு போட்டியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் சேவை அளித்து வருவதால், திருச்சி விமான நிலையம் தினந்தோறும் பயணிகள் எண்ணிக்கையால் களைகட்டி வருகிறது. இதன் உச்சபட்சமாக ஜூன் 7-ம் தேதி ஒரே நாளில் 3,096 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் சாதனை படைத்துள்ளது. மேலும், திருச்சி- டெல்லி விமான சேவையை விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பல்வேறு நகரங்களுக்கு அளித்து வரும் விமான சேவையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்தாண்டில் 1.8 மில்லியன் பயணிகள் கையாளப்பட்ட நிலையில், நிகழாண்டில் பயணிகள் எண்ணிக்கை 2.5 மில்லியனாக உயரும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் 4.5 மில்லியன் பயணிகளை கையாளும் திறனை எட்டும் என்றும் திருச்சி விமான நிலைய ஆணைய குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.