களவாணி, பட்டத்துஅரசன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தஞ்சாவூரை சேர்ந்த நடிகர் துரை.சுதாகர். இவரது மகள் நிலாவின் முதலாவது பிறந்த நாள் தஞ்சையில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், சின்னதுரை, வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், திரைப்பட நடிகர்கள் விமல், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, திரைப்பட இயக்குநர்கள் சிங்கம்புலி, சற்குணம் மற்றும் அடைக்கலமாதா கல்லூரி நிறுவனர் டாக்டர் அருணாச்சலம் உள்ளிட்ட ஏராளமான தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.