திருநெல்வேலியில் இருந்து திருச்சி மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண் யானை…
காட்டில் ஜாலியாக உலா வருகிறது
திருச்சி மாவட்டம் எம். ஆர். பாளையம் காப்புக்காடு பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இங்கு 10 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து ‘ஜெயின்னி ‘என்ற 58 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இந்த முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த பெண் யானையினை தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின் பேரில், மாவட்ட வன அலுவலர் சோமேஸ் சோமன் ( கூடுதல் பொறுப்பு ), உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், சரவணன்குமார் மற்றும் வனச்சரக அலுவலர் சுப்ரமணியம் ஆகியோர் மேற்பார்வையில் வன கால்நடை மருத்துவ அலுவலர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். பின்னர் அந்த யானைக்கு உணவு வழங்கப்பட்டு மற்ற யானைகளுடன் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த யானை காட்டில் ஜாலியாக உலா வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.