தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக எம்.சையது இப்ராஹிம் நியமனம்…!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக ஹாஜி எம்.சையது இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார். தன்னை நியமனம் செய்த பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா, மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜூலு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஹாஜி சாகுல்ஹமீது ஆகியோருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இளைஞரணி அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட சையது இப்ராஹிமுக்கு புதுக்கோட்டை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இவர் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்க துணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். மேலும், திருச்சி ஹக்கீம் கல்யாண பிரியாணி குழுமத்தின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக இயக்குனராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.