திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 50). தச்சு தொழில் செய்து வந்தார். திருமணமான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ( 12.11.2023 ) மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருவெள்ளறை சென்று விட்டு திருப்பைஞ்சீலி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஒரு குழந்தை மட்டும் அவரது உறவினர் வீட்டில் இருந்தது. துறையூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பைஞ்சீலி அருகே சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், லோகநாதன், அவரது மனைவி சுமதி, குழந்தைகள் அபி, அனு, ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லோகநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது . மனைவி மற்றும் 2 குழந்தைகள் லேசான காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினா் அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், லோகநாதன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.