புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது சம்பள கமிஷன் படிந்துரையின்படி குறைந்தபட்ச சம்பளம் ரூ.32,500 வழங்க வேண்டும். தொழிற்சங்க தேர்தலை உடனே நடத்தட வேண்டும்.2004 ம் ஆண்டிற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னக ரயில்வே தொழிலாளா் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு திருச்சி எஸ்.ஆர்.இ.எஸ். கோட்டத் தலைவர் எம் . சுப்பிரமணி தலைமை வகித்தார். கே.முருகன் , முன்னாள் கோட்டத் தலைவர் எம். ஆசிர்வாதம் , துணை கோட்டத் தலைவர் சபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அசோக்குமார், வி. தாமரைசெல்வன், ரவிச்சந்திரன், பி .வாசு, பி.முருகன், ராஜ்குமார், ரமேஷ் பாபு , சிவஞானம், முருகதாஸ், முருகேசன் ,சூரிய பிரகாசம், கோபாலகிருஷ்ணன், எம். சூரியபிரகாஷ் , சந்திரசேகர் ராகுலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோட்டச் செயலாளர் ஜி . பாபு வரவேற்று பேசினார். இறுதியில் எம்.கே.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.