டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைந்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், இந்திய விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கொடுத்து வாழ விடு, அல்லது விவசாயிகளை கொன்று விடு என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Comments are closed.