Rock Fort Times
Online News

 களை எடுக்க ஆள் பற்றாக்குறை : தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயி கடிதம்!

கிராம மக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக 100 நாள் வேலை திட்டம் மூலம் அவர்களுக்கு வருவாயை ஈட்டி தருகிறது அரசு . இதனால் விவசாயக் கூலி செய்து வந்த மக்கள் 100 நாள் வேலை திட்டம் மூலம் பயனடைந்து வரத் தொடங்கினர். ஆனால் அந்த ஒரே காரணத்திற்காக விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை என்று விவசாயிகள் நொந்து போய் உள்ளனர். இப்படி நொந்து போன தென்காசி மாவட்டத்தில் நெல்கட்டும் செவல் கிராமம் பாறைப்பட்டி என்ற குக்கிராமத்தில் மகேஸ்வரன் என்ற விவசாயி தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார் .அந்த கடிதத்தில் விவசாய பணியில் களை எடுப்பதற்கு ஆள் பற்றாக்குறை நீடிக்கிறது. உங்கள் அலுவலகத்தில் உபரி ஊழியர்களை எங்களுக்கு விவசாய  வேலை செய்ய அனுப்புங்கள். அவ்வாறு அவர்களை அனுப்பி வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கூலி பஞ்சப்படி(D.A) பயணப்படி, மதியஉணவு அனைத்தும் கொடுக்க தயாராக உள்ளேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கலகலத்துப் போய் இருக்கிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்