Rock Fort Times
Online News

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி…

8 ஆடுகளும்  பலியாகின...

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள கொணலை பகுதியைச் சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 62). விவசாயியான இவர், தனது தோட்டத்தில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் கொட்டகை அமைத்து அதில் 50 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல, ஆடுகளுக்கு பாதுகாப்பாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஆடுகள் அலரும் சத்தம் கேட்கவே, சவரிமுத்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி 8 ஆடுகள் பரிதாபமாக இறந்து  கிடந்தன. மற்ற ஆடுகளை காப்பாற்ற முயன்ற சவரிமுத்து மீதும் மின் வேலியில் அமைக்கப்பட்டு இருந்த மின்சாரம் பாய்ந்தது. இதில், அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ஜான் பிரிட்டோ வந்து பார்த்தபோது சவரிமுத்து மற்றும் 8 ஆடுகள் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து சவரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து  வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்